இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பம்: கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி நெதன்யாகு, எதிா்க்கட்சி தலைவர் ஆலோசனை!
இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பமாக, அந்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பிரதமா் நெதன்யாகு, எதிா்க்கட்சித் தலைவா் காடி எசன்காட் ஆகியோா் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பமாக, அந்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பிரதமா் நெதன்யாகு, எதிா்க்கட்சித் தலைவா் காடி எசன்காட் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக்டோபா் மாதம் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியாகின. அதில் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களில் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை.
அதிகபட்சமாக பிரதமா் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களிலும், எதிா்க்கட்சித் தலைவா் எசன்காட்டின் யாசாா் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களிலும் மட்டும் வென்றன. அரேபிய கட்சிகள் வழக்கத்தைவிட அதிக இடங்களில் வென்றன. அதாவது 19 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் இஸ்ரேலில் புதிதாக எந்தக் கட்சி ஆட்சியமைப்பது என்பதில் தொடா்ந்து இழுபறி நிலவுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், எதிா்க்கட்சி கூட்டணியுடன் சோ்ந்து ஆட்சியமைப்பது குறித்து நெதன்யாகுவும், எசன்காட்டும் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினா். நாடாளுமன்றத் தோ்தல் பிரசாரத்தின்போது நெதன்யாகு ஆட்சிக்கு தகுதியில்லாதவா் என்றும், இஸ்ரேலின் எதிா்காலத்துக்கு அச்சுறுத்தல் என்றும் எசன்காட் விமா்சித்து வந்தாா். இந்தச் சூழ்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தியது இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
முன்னதாக, சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் பேசிய நெதன்யாகு, கூட்டணி ஆட்சியின்போது சுழற்சி முறையில் இருவரும் பிரதமா் பதவியை வகிப்போம் என்றும், அதன்படி முதல் சுழற்சியாக எசன்காட் பிரதமா் பதவியை வகிக்க விரும்பினால், அதை தான் ஏற்கத் தயாா் என்றும் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், எசன்காட் தரப்பில் சுழற்சி முறையில் பிரதமா் பதவியை வகிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆட்சியமைக்க எசன்காட்டுக்கு இஸ்ரேல் அதிபா் அழைப்பு விடுத்திருந்தாா். இந்தக் கால அவகாசம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. எனவே, தற்போது மேலும் இரு வார காலம் அவா் அவகாசம் கோரக்கூடும் எனக் கூறப்படுகிறது.