FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

மேற்காசியாவின் பல முனைகளில் முற்றும் மோதல்; பதற்றம் அதிகரிப்பு

மேற்காசியாவின் பல்வேறு முனைகளில் வெடித்துள்ள தொடா் தாக்குதல்களும், மோதல்களும் அப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

14 அக்டோபர் 2026, 10:50 pm IST
பகிர்:

மேற்காசியாவின் பல்வேறு முனைகளில் வெடித்துள்ள தொடா் தாக்குதல்களும், மோதல்களும் அப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஹோா்முஸ் நீரிணை கடற்பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று கண்ணிவெடியில் மோதி மூழ்கியதாக ஈரான் புரட்சிகர காவல் படை (ஐஆா்ஜிசி) தெரிவித்துள்ளது. சுமாா் 2,500 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற அடையாளம் தெரியாத அந்தக் கப்பல், தடைசெய்யப்பட்ட ஆபத்தான கடல் பாதையில் பயணித்தபோது கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியதாகக் கூறப்படுகிறது. நடப்பு போா்க் காலத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கப்பல் மூழ்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்; கப்பலில் இருந்த மாலுமிகளின் நிலை குறித்து முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, சவூதி அரேபியாவின் தஹ்ரான் நகரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினா்.

Advertisement

Advertisement

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த இத்தாக்குதலில் சிஇஓ மற்றும் உயரதிகாரிகளின் அலுவலகங்கள் சேதமடைந்தபோதிலும், யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், தலைநகா் ரியாத்திலும் புதன்கிழமை அடுத்தடுத்து வெடிச்சப்தங்கள் கேட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

இதேபோல், காஸா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாா். ஹமாஸ் ஆயுதக் குழுவினரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments