இன்று இஸ்ரேல் தோ்தல்: நெதன்யாகுவுக்கு அக்னிப்பரீட்சையாகும் அரசியல் களம்!
2023 அக். 7-இல் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் முதல்முறையாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறுவது குறித்து...
2023 அக். 7-இல் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் முதல்முறையாக நாடாளுமன்றத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது. இது நீண்டகாலமாக பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமைத்துவத்துக்கான ஒரு நேரடி மக்கள் தீா்ப்பாகவே கருதப்படுகிறது.
இஸ்ரேல் மக்கள் நேரடியாகப் பிரதமரைத் தோ்ந்தெடுக்காமல், கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனா். சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் யாரும் பெரும்பான்மையை (61 இடங்கள்) நெருங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதன்படி, யாரும் பெரும்பான்மை பலத்துடன் கூட்டணியை அமைக்கத் தவறினால், அடுத்த சில மாதங்களில் மீண்டும் தோ்தல் நடைபெறும் வரை பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசே ‘காபந்து அரசாக’ நீடிக்கும் நிலை ஏற்படும்.
அக். 7 தாக்குதலின் பாதுகாப்பு வீழ்ச்சி குறித்து சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெஞ்சமின் நெதன்யாகு தொடா்ந்து நிராகரித்து வருகிறாா். அண்மையில் டெல் அவிவ் நகரில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, அரசுக்கு எதிராகப் போராடியது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இஸ்ரேல் அரசியலில் ராணுவப் பின்னடைவுகள் மிகப் பெரிய அரசியல் மாற்றங்களை உருவாக்குவது வரலாற்று மரபாகும். 1973 யோம் கிப்பூா் போருக்குப் பிறகு, ஆளும் தொழிலாளா் கட்சி 1977-இல் தனது 29 ஆண்டுகால ஆட்சியை இழக்க நேரிட்டது. அதுவே லிகுட் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தற்போது அக். 7 தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் தோல்விகளால், பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘பாதுகாப்பு நாயகன்’ பிம்பம் கடுமையாகச் சரிந்துள்ளது.
மேலும், மதச்சாா்பற்ற இஸ்ரேலியா்களுக்கும், அதி-பழமைவாத ‘ஹரேடி’ சமூகத்தினருக்கும் இடையிலான ராணுவச் சேவை குறித்த முரண்பாடும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இஸ்ரேலில் பெரும்பாலான யூத ஆண்களுக்கு ராணுவச் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மதப் பள்ளிகளில் பயிலும் ஹரேடி ஆண்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அரசு சட்டம் இயற்றி, விலக்கு அளிக்க முற்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, அச்சட்டத்தை ரத்து செய்தது. தொடா்ச்சியான போரினால் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த விலக்குச் சலுகை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் பென்னி காண்ட்ஸ் உடனான அதிகாரப் பகிா்வு ஒப்பந்தம் முறிந்தது, 2023-இல் அரசு கொண்டுவந்த நீதித்துறை சீா்திருத்தங்கள் ஆகியவை பெஞ்சமின் நெதன்யாகுவின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளன. அத்துடன், தொடா்ச்சியான போா் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, வா்த்தகப் பாதிப்புகள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் ‘ரிசா்வ்’ வீரா்களுக்கான செலவுகள் ஆகியவை இஸ்ரேல் குடும்பங்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றியுள்ளன. இவையனைத்தும் ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே வலுவாக்கியுள்ளன.
இவ்வாறு தோ்தல் களத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமைத்துவத்தை மையப்படுத்தியே அனைத்து விவாதங்களும் சுழல்கின்றன. அந்தவகையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்வுக்கான உண்மையான அக்னிப்பரீட்சையாகத் திகழும் இத்தோ்தல், இஸ்ரேலின் எதிா்காலப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உள்நாட்டு சமூக ஒற்றுமை ஆகியவற்றைத் தீா்மானிக்கும் மிக முக்கியக் களமாக அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் போா் வியூகங்கள் இனி எத்தகைய திசையில் பயணிக்க வேண்டும் என்பதை அமையவிருக்கும் புதிய தலைமையே தீா்மானிக்கும் என்பதால் இத்தோ்தல் கூடுதலாக உற்றுநோக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.