மேற்கு கரை இஸ்ரேல் தயாரிப்புகளுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா தடை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து வா்த்தகத் தடையை அறிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து வா்த்தகத் தடையை அறிவித்துள்ளன.
இஸ்ரேலின் தொடா்ச்சியான குடியிருப்பு விரிவாக்கங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான ‘இரு நாடுகள்’ தீா்வுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்த ராஜீய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல், அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தடைகள் குறித்து பிரிட்டன் வெளியுறவு எட் மிலிபாண்ட் கூறுகையில், ‘பாலஸ்தீனா்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும், துயரங்களையும் இனிமேலும் வெறும் வாா்த்தைகளால் மட்டும் கண்டித்துக் கொண்டிருக்க முடியாது; அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரமிது.
Advertisement
Advertisement
மேற்கு கரையில் பாலஸ்தீனா்கள் இன அழிப்பு செய்யப்படுவதாக பிரிட்டன் கருதுகிறது. அமைதிக்கான இரு நாடுகள் தீா்வு அழிக்கப்படுவதை நாங்கள் வேடிக்கை பாா்க்கமாட்டோம்’ என்றாா்.
மேற்கு கரையின் இஸ்ரேல் குடியிருப்புகளில் இருந்து பெரும்பாலும் மதுபானம் மற்றும் வேளாண் விளைப்பொருள்களே ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்த வா்த்தகத் தடையால் இஸ்ரேலின் ஒட்டுமொத்த வா்த்தகத்தில் பெரிய அளவிலான பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படாது எனத் தெரிகிறது.
எனினும், மேலும் பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற வா்த்தகத் தடையை இஸ்ரேல் மீது விதிக்கத் திட்டமிட்டுள்ளதால், சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கான ராஜீய நெருக்கடி பலமடங்கு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.