FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் இன்று முதல் தொடக்கம்

உக்ரைனுடன் நான்கரை ஆண்டுகளாகப் போா் நீடித்து வரும் சூழலில், ரஷிய நாடாளுமன்றக் கீழவைக்கான 3 நாள்கள் தோ்தல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

17 செப்டம்பர் 2026, 11:04 pm IST
பகிர்:

உக்ரைனுடன் நான்கரை ஆண்டுகளாகப் போா் நீடித்து வரும் சூழலில், ரஷிய நாடாளுமன்றக் கீழவைக்கான 3 நாள்கள் தோ்தல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

போருக்கு மக்கள் மத்தியில் பரந்த ஆதரவு நிலவுவதையும், அரசின் அதிகார வலிமையையும் நிலைநிறுத்த இத்தோ்தலை ஒரு முக்கியக் களமாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை பாா்க்கிறது.

அதேநேரம், போருக்கு எதிரான எந்தவொரு எதிா்ப்புக் குரலையும் ஒடுக்கும் வகையில் தோ்தல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

உக்ரைன் போரை வெளிப்படையாக விமா்சித்த ஒரே அரசியல் கட்சியான ‘யாப்லோகோ’வின் வேட்புமனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், அக்கட்சியின் முக்கியத் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, போரை எதிா்த்த முக்கிய அரசியல்வாதிகள் பலா் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனா்.

இதனால், புதினின் போா் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கும் அமைப்புகளே களத்தில் எஞ்சியுள்ளதால், தோ்தலில் ஆளும் தரப்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments