ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில்11 பேர் பலி, 24 பேர் காயம்!
மார்க்கஸி மாகாண நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து கவிழ்ந்தது பற்றி..
ஈரானில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 11 பேர் பலியானதாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
மத்திய மார்க்கஸி மாகாணத்தில் உள்ள சவே-ஹமேதான் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
பேருந்து எங்குச் சென்றுகொண்டிருந்தது என்பதைப் பற்றி தகவல்கள் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
உலகிலேயே மிக மோசமான போக்குவரத்துப் பாதுகாப்புப் பதிவுகளில் ஒன்றை ஈரான் கொண்டுள்ளது.
விபத்துகளால் ஆண்டுக்கு 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
பாதுகாப்பற்ற வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளைப் புறக்கணித்தல், போதுமான அவசரக்கால சேவைகள் இல்லாததே இந்த அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், மேற்கு நகரமான சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் ஒன்று மற்ற வாகனங்கள் மீது மோதி வெடித்ததில் 11 பேர் பலியானதோடு, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.