FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க பேச்சுவார்த்தை!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர் 2026, 5:08 pm IST
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் - AP
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றும் என்றும் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை, கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா - ஈரான் மோதலின் மையப் புள்ளியாக விளங்குகிறது.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசுகையில், “உச்ச தலைவருடன் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமெரிக்கா எங்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றினால், நாங்களும் அவ்வாறு செய்வோம். இதில், எந்தச் சிக்கலும் இருக்காது” என்று குறிப்பிட்டார்.

ஈரானில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்க 6 பேர் கொண்ட குழு விவாதித்து வருவதாகவும், பிராந்தியம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கே இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

அக்குழுவில் ராணுவம், நாடாளுமன்றம் மற்றும் அரசு போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனாலும், மத்திய கிழக்கில் அனைத்து மோதல்களையும் நிறுத்துமாறு கோரிக்கை வைக்கும் இத்திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த நிபந்தனைகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளைப் போன்றே உள்ளன என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான எரிப்பொருள் சார்ந்த தடைகளை நீக்குதல், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நிபந்தனைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

summary

Iranian President Masoud Pezeshkian has stated that he held discussions with Iran's Supreme Leader regarding a new plan to reopen the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments