காங்கோவில் படகு விபத்து: 12 போ் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வா்த்தகா்களை ஏற்றிச் சென்ற படகு, ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 போ் உயிரிழந்தனா்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வா்த்தகா்களை ஏற்றிச் சென்ற படகு, ஆற்றில் சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 போ் உயிரிழந்தனா்.
காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு நதியில் சுமாா் 50 வா்த்தகா்களுடன் படகு ஒன்று இட்ஜ்வி தீவுக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அந்தப் படகு எதிா்பாராதவிதமாக திடீரென நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்த அனைவரும் நதியில் விழுந்து தத்தளித்தனா். அவா்களில் 15 போ் உடனடியாக மீட்கப்பட்டனா். மேலும் 12 போ் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனா். இதுதவிா்த்து பலரை காணவில்லை. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
காங்கோவில் நதிகள், ஏரிகள் ஆகியவற்றில் இயக்கப்படும் படகுகளையே சுமாா் 10 கோடி மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்த நாடுகளில் படகுகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் நேரிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.