மகரம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

மகரம் (CAPRICORN)

இது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​

டிசம்பர் 2

இன்று தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

டிசம்பர் 1 - 7

 

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அமைதியாக இருந்து காரியமாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவால் அலைச்சல் குறையும்.

விவசாயிகள் குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். அரசியல்வாதிகள் எதிரிகளின் நடவடிக்கைகளை கவனிப்பீர்கள்.  

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.  பெண்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். மாணவர்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 4, 5.

டிசம்பர் மாத பலன்கள்

 

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில்  சனி -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ - சுக  ஸ்தானத்தில் குரு (வ) -  பாக்கிய ஸ்தானத்தில் கேது -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு அல்ல மதிப்புள்ள பேச்சு என மற்றவர்கள் நினைப்பார்கள். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

பெண்கள் உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.    

மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

உத்திராடம்:

இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றசாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் உண்டாகும்.

திருவோணம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம்:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 

(உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்)

உங்களுக்கு இந்த ஆண்டில் கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது.

கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை.

உத்தியோகத்தில் மேன்மையுண்டாகும். பணக் கஷ்டம் இருக்காது. முதலாளி - தொழிலாளி உறவு பாதிக்கப்படாமல் காப்பதில் இரு சாராருக்குமே பொறுப்புள்ள – நேரம் இது. உத்தியோக மேன்மையுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். தேவையான இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

தொழிலில் அபிவிருத்திகள் படிப்படியாக ஏற்படும். வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. மகசூல் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டாகலாம். பொருளாதார் சிக்கல் வராது. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படாது. மக்கள் சுபிட்சம் சீராக இருக்கும். கட்சிப் பணிகளில் கல சுறுப்பு ஏற்படும். பேசும் வார்த்தையில் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கலைத்துறைப் பணிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். தொழில் சிறப்படையும். பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படாது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இசை, எழுத்து ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.

பெண்களின் பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப அமைதி கெடாது. வேலை செய்யும் பெண்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பணிகள் சுமாரான நிலையில் நடைபெறும். சில நன்மைகள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதை. உள்ளக் கோளாறு போன்ற குறைகள் நிவர்த்தியாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியம் ஏதேனும் நடக்கலாம்.

மாணவர்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். நலம் விளையும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெறுவர். மருத்துவம், மேனேஜ்மெண்ட் துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த ஆண்டு செல்வ நிலையில் எச்சரிக்கையோடு இருந்தால் எதையும் பறிபோகாமல் காத்துக்கொள்ளலாம். மிகுந்த உழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. கலைத்துறையில் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படாது. குடும்ப நலம் உண்டு. அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்.  நற்பணிகளில் ஈடுபடுங்கள். பேசும்போது அளந்து பேசினால் தொல்லை இல்லை. பெரியோர் ஆசியை விரும்பிப் பெற்றால் பல விஷயங்களில் இழிவு உண்டாகாது தப்பிக்கலாம்.

திருவோணம்:

இந்த ஆண்டு பொதுவாகச் சோதனை உண்டு. குடும்ப நலம் பாதிக்கப்படலாம். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உண்டு. பெரியோர் மனவருத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைப்படாது. எந்த விதமான இடரையும் சமாளிப்பதோடு, கௌரவக் குறை உண்டாகாதபடியும் காக்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். விவசாயிகளுக்கு ஏற்றம் ஏற்படும். குடும்ப நலம் சீராக இருக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:

இந்த ஆண்டு அன்றாடப் பணிகள் செவ்வனே நடக்கும். ஆனால் மிகுந்த முயற்சியின் பேரிலேயே ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்குச் சங்கடம் வராது. விவசாயிகளுக்கு ஏற்றம் உண்டு. கொடுக் கல்-வாங்கலில் அகலக்கால் வைக்க இது உகந்த நேரம் இல்லை. வீடு, நிலம் போன்றவற்றில் தகராறு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள். பயன் தரும். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப நலம் சீராக இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.