நேற்று வட இந்தியாவில் சில மாநிலங்களில் கர்வா செளத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இது 4 நாட்களுக்கு நடைபெறும் ஒரு புராதனப் பண்டிகை. இதன் நோக்கம், கர்வ செளத் பண்டிகை தினத்தில் சுமங்கலிப் பெண்கள் காலையில் கண் விழித்தது முதலே பல்லில் பச்சைத் தண்ணீர் கூடப் படாமல் விரதம் இருந்து தமது கணவரின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்புக்காக கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன் படி விரதமிருக்கும் பெண்கள் மாலையில் முழு நிலவு தோன்றியதும், ஒரு வெள்ளி சல்லடை வழியாக முழு நிலவைப் பார்த்த கையோடு அப்படியே அதை இறக்கி அதன் வழியே தங்களது கணவரின் முகம் கண்டு, அவரது கையால் இனிப்பை உண்ட பின் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இந்த விரதமுறை. நேற்று அந்தப் பண்டிகை ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோலகலமாகக் கொண்டாடப் பட்டது.
இதில், இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள போலீஸார் கையாண்ட புதுமையான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தான் பண்டிகையின் ஹைலைட்!
லக்னெள போக்குவரத்துப் போலீஸார், நேற்று சாலையில் தங்களைக் கடந்த வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதிகளை எல்லாம் மடக்கிப் பிடித்து ஃபைன் போட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களது மனைவிமார்களிடம் இனிமேல் கணவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்ட முயன்றால் அதைக் கவனித்து பொறுப்பாக அவர்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்துரைத்து ஹெல்மெட் அணிவதின் பாதுகாப்பு அம்சத்தை உணர்த்த வேண்டியது மனைவிகளின் கடமை என போதித்தனர். அதோடு மட்டுமல்ல, ஃபைன் வசூலித்த அத்தனை பேருக்குமே தலா ஒரு ஹெல்மெட் வேறு இலவசமாக அளித்து அனுப்பினார்களாம். இது நிச்சயம் புதுமை தான். ஏனெனில், போக்குவரத்துப் போலீஸார் என்றாலே, ஃபைன் வசூலிப்பதை மட்டும் தான் கடமையாகச் செய்யக்கூடியவர்கள் என்றொரு பழிச்சொல் அவர்கள் மீது உண்டு. ஆனால் இம்முறை, அவர்கள் வித்யாசமாக யோசித்து, லக்னெள தம்பதிகளிடையே ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே!
Image courtesy: better india.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



