எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:33 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

ஆண்டு தோறும் வரும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி,   ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தைச் சுற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்கக் கொண்டுவரப்பட்டது. பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ரகு பட்டர்  கொடியேற்றினார். வெள்ளிக்கிழமை முதல் தேரோட்டம் வரை  தினமும் ஆண்டாள் ரங்க மன்னர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சியளித்து அருள்பாலிக்க உள்ளனர். தேரோட்டம் நிகழ்ச்சிகள்  கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

கொடியேற்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.