கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக மேயர் மஞ்சுநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக மேயர் மஞ்சுநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மேயரை, மாநகர ஆணையர் குமார்நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரில் மழை வரும் போதெல்லாம் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
இதனை, கடந்த பாஜக ஆட்சியின் போதே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். ஆனால், அப்போது அதிகாரத்திலிருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
Advertisement
Advertisement
இது தொடர்பாக, நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகர வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு சாலைகளின் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவில் அதன் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.