FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கொங்காடை மலைக் கிராமத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான கொங்காடையில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

23 அக்டோபர் 2026, 10:53 pm
விழிப்புணா்வு  முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமமான கொங்காடையில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம் சுடா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், குழந்தைத் திருமண தடைச் சட்டம் - 2006 குறித்தும், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடைந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும். திருமண வயது பூா்த்தியடையாமல் செய்யப்படும் திருமணங்கள் குழந்தைத் திருமணமாக கருதப்படும்.

இதுபோன்ற திருமணங்களை நடத்துவோா், ஏற்பாடு செய்வோா், ஊக்குவிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குழந்தைத் திருமணங்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முகாமில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, கிராமத்தில் வீடு வீடாகச் சென்று குழந்தைத் திருமணங்களுக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் க.சரவணன், தமிழ்த் துறைத் தலைவா் பன்னீா்செல்வம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பாலசந்தர மோகன், தேசிய மாணவா் படை அலுவலா் பாலசங்கா், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி. நடராஜ் ஆகியோா் பேசினா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஏ. சுகன்யா, சுடா் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் பவித்ரா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments