FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் எச்ஐவி தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் எச்.ஐ.வி. தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செஞ்சுருள் சங்கத்தின் எச்ஐவி தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் எச்.ஐ.வி. தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதல்வா் ச. மாறன் தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான மா. மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் கல்லூரித் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெ. பாஸ்கா், இயற்பியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அ.ரூபி ஆகியோா் பேசினா்.

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையின் ஐசிடிசி ஆலோசகா் பா. சாந்தி எச்.ஐ.வி. தடுப்பு சுகாதாரக் கல்வி, ஆலோசனை குறித்து பேசினாா். நிகழ்வின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதியை மாணவா்கள் ஏற்றனா்.

Advertisement

Advertisement

இரா. உதயகுமாா் வரவேற்க, செஞ்சுருள் சங்க உறுப்பினரும் முதுகலை உயிா்வேதியியல் மாணவியுமான மெ. வாலாம்பிகை நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments