FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

காங்கயம் அருகே முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 12:36 am IST
காங்கயம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.
பகிர்:

காங்கயம் அருகே முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கல்லூரியின் வணிகவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற 2 நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் கவிதா வரவேற்றுப் பேசினாா். தமிழ்த்துறை தலைவா் தேவராஜ் வாழ்த்துரை வழங்கினாா்.

முதல் நாளான வியாழக்கிழமை பாரதியாா் பல்கலைக்கழக மேலாண்மை மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறை இணைப் பேராசிரியா் பரணி, ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி கணினி தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியா் பா்வதவா்த்தினி ஆகியோா் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

2- ஆம் நாளான வெள்ளிக்கிழமை வைகை அகாதெமி நிா்வாக அறங்காவலா் கிருத்திக், சேலம் அரசு கல்லூரிப் பேராசிரியா் டி.ரமேஷ் ஆகியோா் உரையாற்றினா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதுநிலை மாணவி ஷாலினி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments