FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

ஷிராடி வனப்பகுதி நெடுஞ்சாலையில்  5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை: அமைச்சர் எச்.டி.ரேவண்ணா

மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஷிராடி வனப் பகுதி நெடுஞ்சாலையில் 5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:30 am IST
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஷிராடி வனப் பகுதி நெடுஞ்சாலையில் 5 மாதங்களுக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசனில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
குடகு,  தென் கன்னட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் ஷிராடி வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க ரூ. 130 கோடி அளவுக்கு நிதி தேவைப்படுகிறது. எனவே அடுத்த 5 மாதங்களுக்கு அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
குடகு மாவட்டங்களில் மழையால் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் போக்குவரத்து இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அதேபோல குதிரேமூக் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 169-இல் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சார்முடி வனப்பகுதியில் உள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments