FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"தங்க சுரங்க நிறுவன தொகுப்பு வீடுகளை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும்'

தங்கச் சுரங்க நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தங்கச் சுரங்க நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என கோலார் தங்கவயல் தொகுதி எம்எல்ஏ ரூபகலா தெரிவித்தார்.
பெலகாவி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது: தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தை செயல் படுத்த வேண்டும். வேலைவய்ப்பையும் உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள் நீண்ட காலமாக குடியிருக்கும் சுரங்க நிறுவன வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்றார்.
1880-ஆண்டு  ஜான் டெய்லர் கம்பனியால் தங்கவயலில் தங்கசுரங்க தொழில் தொடங்கப்பட்ட போது, ஆபத்தான சுரங்கப் பணிக்கு யாரும் முன்வரவில்லை. அப்போது, தமிழகத்தின் வடஆற்காடு, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த தாழ்த்தபட்ட சமுதாயத்தைச் தமிழர்கள் துணிச்சலாக முன்வந்தனர். 
அந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக மாரிகுப்பம் தொடங்கி பாலக்காடு வரை மூங்கில் பிரம்புகளால் ஆன தட்டி வீடுகள் அமைக்கப்பட்டன. தங்க சுரங்கத்தில் அடிக்கடி ஏற்படும் பூமி அதிர்ச்சியினால் ஏற்படும் சேதத்தை தடுக்க தட்டி வீடுகள் அமைக்கப்பட்டதாக ஆங்கிலேயர்கள் கூறினாலும், ஆங்கிலேய அதிகாரிகள் வசிக்க உறுதியான பங்களாக்கள் கட்டப்பட்டன. பின்னர், சிமெண்டு பலகையிலான சுவர்கள் அமைக்கப்பட்ட மாதிரி வீடுகளாக மாறின.
சுரங்கத் தொழிலாளர்கள் பணி ஒய்வு பெற்றதும் இந்த கம்பெனி வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றனர். பல தொழிலாளர்கள் பணி ஒய்வு பெற்ற பிறகு இருப்பு தொகையை செலுத்தி விட்டு நிறுவன வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் 2001-இல் தங்கச்சுரங்கம் முடப்பட்டது. அப்போது தங்கசுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3,100 ஆகும். இவர்களில் 2,812 தொழிலாளர்களுக்கு அவர்கள் வசித்து வந்த நிறுவன வீடுகளை அவர்களுக்கே விற்பனை செய்து விட்டது. மேலும் இந்த வீடுகளுக்கு இருப்பு தொகை கட்டி வசித்து வரும் நிறுவன  வீடுகள் எட்டாயிரம் உள்ளன.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யபட்ட நிறுவன வீடுகளை தவிர மீதமுள்ள வீடுகள், நிலம் உள்ளிட்ட அனைத்துசொத்துக்களும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தங்கச்சுரங்க நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. சுரங்க நிறுவன பகுதியில் உள்ள ஆலயங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பபட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த விடுகளை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments