FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கூட்டுத் தலைமையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வோம்: முன்னாள் அமைச்சர் எச்.ஆஞ்சநேயா

மக்களவைத் தேர்தலைக் கூட்டுத் தலைமையில் எதிர்கொள்வோம் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.

Updated On : 31 டிசம்பர் 2018, 8:23 am IST
பகிர்:

மக்களவைத் தேர்தலைக் கூட்டுத் தலைமையில் எதிர்கொள்வோம் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.
தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர், மடாதிபதி சிவக்குமாரசாமிகளை சந்தித்து  உடல்நலம் குறித்து விசாரித்தார்.  பின்னர்,  ஆஞ்சநேயா செய்தியாளர்களிடம் கூறியது:-
காங்கிரஸில் இணைந்தவர்களுடன், பழைய காங்கிரஸார் மோதலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. காங்கிரஸில் எந்த பிளவும் இல்லை. கட்சியில் யார் இணைந்தாலும் அவர்களும் காங்கிரஸார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 
முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸில் இணைந்து பல ஆண்டுகள் ஆகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அவர் கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த முதல்வராகச் செயல்பட்டுள்ளார். கட்சிக்கும் நல்லதொரு முன்னேற்றத்தை தந்துள்ளார். அவரை காங்கிரஸில் இருந்து பிரித்து பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலை  கர்நாடகத்தில் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜுன கார்கே, ஜி.பரமேஸ்வர், எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோருடன் கூட்டுத் தலைமையில் எதிர்கொள்வோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments