இன்றுமுதல் சித்தராமையா பாதாமியில் சுற்றுப்பயணம்
முன்னாள் முதல்வர் சித்தராமையா, வியாழக்கிழமை முதல் தனது பாதாமி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, வியாழக்கிழமை முதல் தனது பாதாமி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, அத்தொகுதியில் குடியிருக்க வீடு பார்த்து வருகிறார். இதற்காக ஜூன் 7-ஆம் தேதி பாதாமி செல்ல திட்டமிட்டிருக்கும் சித்தராமையா, 4 நாள்கள் அங்கு தங்கியிருந்து தொகுதி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பாகல்கோட் மாவட்டத்தில் வென்றுள்ள ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ சித்தராமையா மட்டுமே. எனவே, அங்கு தங்கியிருந்து தொகுதி பணி மட்டுமல்லாது, வட கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.