FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

புதிய கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.

Updated On : 26 ஜூன் 2018, 9:20 am IST
பகிர்:

புதிய கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரை சேர்ந்த மின் ஒப்பந்ததாரர் ஒருவர், புதிதாக கட்டிய கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்குமாறு ராய்ச்சூரு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.சிவகுத்தி, ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதையடுத்து, லஞ்சப் பணமான ரூ.25 ஆயிரத்தை திங்கள்கிழமை எஸ்.சிவகுத்தியிடம், மின் ஒப்பந்ததாரர் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எஸ்.சிவகுத்தியிடம் ராய்ச்சூரு லஞ்ச ஒழிப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments