எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது: ஸ்ரீராமுலு
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் எதிர்க்கட்சிகளின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் எதிர்க்கட்சிகளின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக மக்களால் சட்டப்பேரவைத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சியினர், தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்க கனவு காணுகின்றனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாஜகவை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொண்டன. ஆனால், பிரதமர் மோடியின் அலையால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸுக்கு எதிராக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
ஆனால், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் பேசுவது ஒன்று, நடந்து கொள்வது மற்றொன்று என்பதனை நிரூபித்துள்ளார். காங்கிரஸை மக்கள் மட்டுமன்றி, மாநிலக் கட்சிகளும் புறக்கணிப்பார்கள் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.