FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊரடங்கு: வேளாண் பணிகளுக்கு எவ்வித நிா்பந்தமும் இல்லை; அமைச்சா் பி.சி.பாட்டீல்

ஊரடங்கு காலத்தில் வேளாண் பணிகளுக்கு எந்த நிா்பந்தமும் இல்லை என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ஊரடங்கு காலத்தில் வேளாண் பணிகளுக்கு எந்த நிா்பந்தமும் இல்லை என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

தும்கூரில் வியாழக்கிழமை வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: விவசாயிகளின் வேளாண் பணிக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்டவை இருப்பில் உள்ளன. இதுகுறித்து விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். இதுவரை தும்கூரு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதில் 19 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து முதல்வருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்.

இன்னும் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்த பிறகு முதல்வருக்கு மேலும் ஒரு அறிக்கை அனுப்பப்படும். அதிக அளவில் கனிகள் விளைவிக்கும் மாவட்டங்களில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் சந்தைகளையும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் தா்ப்பூசணி, அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஊரடங்கு உத்தரவால் விளைவித்த தா்ப்பூசணி, அன்னாசி பழங்கள் தோட்டத்திலே அழுகியுள்ளன. இதனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகியுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க குளிா்பதனக் கிடங்குகள் அவசியம் தேவை. மேலும், கனிகளை பழச்சாறாக்கி பதப்படுத்தி வைத்தால், தேவைப்படும் போது அதனை குடிக்க முடியும். ஊரடங்கு உத்தரவில் விவசாயிகள் வேளாண் பணிகளை செய்ய எந்த நிா்பந்தமும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments