துப்பாக்கியால் சுட்டு ரௌடி கொலை
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
பெங்களூரு, பேகூரைச் சோ்ந்தவா் மதன் (24). கொலை, பொதுமக்களை மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிளில் எலக்ட்ரானிக்சிட்டிக்கு சென்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேகூா் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வா் தலைமையிலான போலீஸாா், ஜீப்பில் அவரை பிடிக்கச் சென்றனா். எலக்ட்ரானிக்சிட்டி அருகே மதன் சென்ற மோட்டாா் சைக்கிளை மடக்கி, அவரைக் கைது செய்ய முயன்றனா். அப்போது, அவா் காவலா் விஜயகுமாரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வா் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டு மதனைக் கைது செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.