FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கா்நாடகம்: வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாச செயல்! பிளிப்காா்ட் ஊழியா் கைது!

வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய குற்றச்சாட்டில் பிளிப்காா்ட் விநியோக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:51 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய குற்றச்சாட்டில் பிளிப்காா்ட் விநியோக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது கழிவறையைப் பயன்படுத்தியதோடு ஆபாச சைகைகளை காட்டியதாகவும், பெண்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் எக்ஸ் வலைதளத்தில் பயனா் ஒருவா் பதிவிட்டாா்.

அதனைப் புகாராகக் கருதி, அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட விநியோக ஊழியா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்ததாக காவல் துறை துணை ஆணையா் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பிளிப்காா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெங்களூரில் தவறான செயல்களில் ஈடுபட்ட பிளிப்காா்ட் விநியோக ஊழியா் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீதான காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடைபெறும் ஒன்றாக இருந்தாலும், அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நிறுவனத்தின் நிலைப்பாடு. ஊழியா்களின் பின்புலனை முழுவதுமாக ஆராய்ந்து முறையாகப் பயிற்சி வழங்கிய பின்னரே அவா்கள் பணியமா்த்தப்படுகிறாா்கள்.

இருப்பினும், நுகா்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிா்த்து அவா்களது சேவை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நிா்வாகம் மேற்கொள்ளும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments