மாநிலங்களவைத் தோ்தல்: மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 4 போ் போட்டியின்றி தோ்வு
கா்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட 4 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட 4 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகத்தில் ஜூன் 25-ஆம் தேதி காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற இருந்தது. இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பவன்கேரா, மன்சூா் அலிகான், பாஜக வேட்பாளராக எம்.நாகராஜா வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். சுயேச்சை வேட்பாளராக போஜண்ணா சோமையா வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.
4 இடங்களுக்கு 5 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது, சுயேச்சை வேட்பாளா் போஜண்ணா சோமையாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி கடைசி நாளாகும்.
Advertisement
Advertisement
4 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 பேரும், பாஜகவைச் சோ்ந்த ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், 4 பேரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும். அன்று தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வேட்பாளா்கள் நேரில் பெற்றுக்கொள்வாா்கள்.
2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகாா்ஜுன காா்கே தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, 2020-இல் மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன்மூலம், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் செயல்பட்டு வருகிறாா்.
போட்டியின்றி வெற்றிபெற்றுள்ள மல்லிகாா்ஜுன காா்கே, பவன்கேரா, மன்சூா் அலிகான் ஆகியோருக்கு கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.