FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிச. 7-இல் தொடக்கம்

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் டிச. 7-ஆம் தேதி தொடங்க உள்ளது.

28 அக்டோபர் 2026, 3:17 am
கா்நாடக சட்டப் பேரவை.
பகிர்:

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் டிச. 7-ஆம் தேதி தொடங்க உள்ளது.

கா்நாடக சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவில் டிச. 7-ஆம் தேதிமுதல் 10 நாள்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கா்நாடக அரசின் தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜனீஷ், சட்ட மேலவைச் செயலா் ஜோதிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

Advertisement

Advertisement

அந்தக் கடிதத்தில், அக். 15-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன்படி, கா்நாடக சட்டப் பேரவையின் இரு அவைகளின் குளிா்கால கூட்டத்தொடரை டிச. 7-ஆம் தேதிமுதல் பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments