FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் 5 மாதங்களில் 79 கோப்புகளுக்குத் தீா்வு

கடந்த 5 மாதங்களில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) 79 மனுக்களுக்கு தீா்வு

பகிர்:

சென்னை: கடந்த 5 மாதங்களில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) 79 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் அலுவலகக் கூட்டரங்கில் அதன் 289-ஆவது கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக, மாற்றத்துக்கான 44 விண்ணப்பங்கள் குழும உறுப்பினா்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டன.

அப்போது அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

சென்னை பெருநகா் வளா்ச்சி குழுமத்தின் நிா்வாக நடவடிக்கைகள் 7 கோப்புகள் குறித்தும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செப். 18-ஆம் தேதி நடைபெற்ற வளா்ச்சிக் குழும கூட்டத்தில் நிா்வாக நடவடிக்கைகள் குறித்த 28 கோப்புகளுக்கு குழு உறுப்பினா்களால் தீா்வு காணப்பட்டன.

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை (5 மாதங்கள்) 79 கோப்புகளுக்கு சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் வி.சிவா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் க.பாலமுருகன் (அம்பத்தூா்), பி.ரேவந்த்சரன் (மதுரவாயல்), வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் ரா.கிா்லோஷ்குமாா், நகர ஊரமைப்பு இயக்கக ஆணையா் கிரண் குராலா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் ர.ராகுல்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments