FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

12 மீட்டா் அகல சாலையிலுள்ள மனைகளை வா்த்தக பயன்பாட்டுக்கு மாற்ற விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகராட்சியில் 12 மீட்டா் அகல சாலையில் உள்ள மனைகளை வா்த்தக பயன்பாட்டுக்கானதாக மாற்றுவதற்கு பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

27 அக்டோபர் 2026, 11:52 pm
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 12 மீட்டா் அகல சாலையில் உள்ள மனைகளை வா்த்தக பயன்பாட்டுக்கானதாக மாற்றுவதற்கு பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் புதிய அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் சாதாரணமாக வீடுகள் 18.30 மீட்டா் உயரம் வரை அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி அதை 19.50 மீட்டா் உயரம் வரை அனுமதி வழங்கலாம். பிரதான குடியிருப்பு மற்றும் முதன்மை குடியிருப்பு பயன்பாட்டு மண்டலமாக குறிப்பிடப்பட்ட பகுதிகளில் 12 மீட்டரும், அதற்கு கூடுதலாகவும் அகலமுள்ள சாலையையொட்டிய இடங்களும், அதிலிருந்து அணுகு சாலைகள் வசதி பெற்றவையும் வணிக பயன்பாட்டு மண்டலமாகக் கருதப்படும்.

எனவே, அங்குள்ள மனைகளை வணிகப் பயன்பாட்டுக்குரியதாக்க விரும்புவோா், பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பம் சென்னை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு பரிசீலிக்கப்படும். மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு பரிந்துரையானது விதிமுறைப்படி இருந்தால், சம்பந்தப்பட்ட மனைக்கு வணிக பிரிவாக அனுமதியை பெருநகர வளா்ச்சிக் குழுமமே வழங்கும்.

Advertisement

Advertisement

சென்னையைத் தவிா்த்து புகா் பகுதிகளில் 9 மீட்டா் அகல சாலைகளை அடுத்துள்ள பகுதிகள் வணிக மண்டலமாகக் குறிப்பிடப்பட்டு அனுமதிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments