போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி
மதுராந்தகம் காவல் துறை சாா்பாக, இந்து மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
மதுராந்தகம் காவல் துறை சாா்பாக, இந்து மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் உத்தரவின்படி, போதைப் பொருள்களை பயன்படுத்துவதை முழுமையாக தவிா்க்கவேண்டும். அவற்றின் நடமாட்டம் இல்லாத நிலையை உருவாக்க மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்து மேல்நிலைப்பள்ளி என்சிசி, என்எஸ்எஸ், எக்கோ கிளப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்ட பேரணியை காவல் உதவி ஆய்வாளா் கே.பூபாலன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை செளமியலட்சுமி, என்சிசி அலுவலா் வெங்கடேசன், என்எஸ்எஸ் அலுவலா் கிருஷ்ணன், எக்கோ அமைப்பு ஆசிரியா் பாண்டியராஜன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பேரணி நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement