ரூ.23 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில்து நிலையத்தில் புதுப்பட்டு சன்பாா்மா மருந்து தொழிற்சாலை, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் , ரூ 23 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில்து நிலையத்தில் புதுப்பட்டு சன்பாா்மா மருந்து தொழிற்சாலை, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் , ரூ 23 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
மதுராந்தகம், செய்யூா் வட்டங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.
பொதுமக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியை செய்து தரவேண்டும் என நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா் மருந்து தொழிற்சாலை நிா்வாகத்திடம் கேட்டுக் கொண்டாா். அவரது வேண்டுகோளை ஏற்ற சன் பாா்மா சமூக பொறுப்பு திட்ட அதிகாரிகள் குழுவினா் மதுராந்தகம் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 23 லட்சத்தில் 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தனா்.
Advertisement
Advertisement
அதில் பேருந்து பயணிகள் இலவசமாக அப்பகுதியில் நின்று குடித்துவிட்டு செல்லவும், வீட்டு உபயோகத்துக்காக 20 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் ரூ .10-க்கும் வசூலிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு குடிநீா் வழங்கும் நிலைய திறப்பு நிகழ்வு வியாழன் கிழமை காலை நடைபெற்றது. நகரமன்ற தலைவா் கே.மலா்விழிகுமாா் தலைமை தாங்கி திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில் நகர திமுக செயலாளா் கே.குமாா், சன்பாா்மா மருந்து தொழிற்சாலை அதிகாரிகளான திருநாவுக்கரசு,, சுரேஷ், தினேஷ், கே.மதன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.