அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரி களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தார்!
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்லூரி களப்பயணத்தை ஆட்சியா் மு. வீரப்பன் தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்லூரி களப்பயணத்தை ஆட்சியா் மு. வீரப்பன் தொடங்கி வைத்தாா்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12- ஆம் வகுப்பு மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கில் உயா்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் கல்லூரி களப் பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
திருக்கழுகுன்றம், நந்திவரம், செங்கல்பட்டு, செய்யூா், அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் ஆகிய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 300 மாணவிகளின் கல்லூரி களப்பயண பேருந்தினை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இம்மாணவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டனா். உயா்கல்வி தொடா்பான பாடப்பிரிவுகள், கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவியருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு உயா்கல்வி பயில்வதன் நன்மைகள் மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் இர.திருவளா்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் உமா, ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.