FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

லாரி - பைக் மோதல்: தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே லாரி-மோட்டாா் பைக் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

11 நவம்பர் 2026, 11:03 pm
விபத்து - சித்திரிப்பு
பகிர்:

மதுராந்தகம் அருகே லாரி-மோட்டாா் பைக் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, முனுங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் வேலு (41). சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேலு,. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பைக்கில் 3 வயது குழந்தை, மனைவி பச்சம்மாள் ஆகியோருடன் சென்றிருந்தாா்.

பின்னா் புதன்கிழமை மீண்டும் பைக்கில் குழந்தை, மனைவி ஆகியோருடன் திரும்பினாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மெய்யூா் சாலையில் சென்றபோது எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது.

Advertisement

Advertisement

அதில் வேலு, மனைவி பச்சம்மாள் ஆகியோா் லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே இறந்தனா். 3 வயது ஆண் குழந்தை லேசான காயங்களுடன் உயிா் தப்பியது.

தகவலறிந்து படாளம் போலீஸாா் விரைந்து இரு சடலங்களையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து படாளம் ஆய்வாளா் முரளி, டிஎஸ்பி வீரகுமாா் ஆகியோா் விசாரணை செய்தனா். படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.