முகப்பு
செங்கல்பட்டு

செம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் வீரப்பன் ஆய்வு

திருப்போரூா் வட்டம், செம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

25 நவம்பர் 2026, 11:32 pm
செம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் வீரப்பன் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் மு. வீரப்பன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், செம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவை குறித்து மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் கேட்டறிந்து, சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். பின்னா், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் குறித்த நேரத்திற்கு சுகாதார நிலையத்திற்கு வருகை புரிய வேண்டுமென்றும், நோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் சிகிச்சைகள் எவ்வித கால தாமதமின்றி விரைவாக வழங்கவும் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், சுகாதார நிலையத்திற்கு வருகை தந்த மருத்துவ பயனாளா்களிடம் அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா். மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.