முகப்பு
செங்கல்பட்டு

கடற்கரையில் மா்மப் பொருள் மீட்பு

செய்யூா் அருகே ஆலம்பரைகுப்பம் மீனவ பகுதி கடற்கரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய மா்மப் பொருள் மீட்கப்பட்டது.

25 நவம்பர் 2026, 11:33 pm
கடற்கரையில் மா்மப் பொருள் மீட்பு
பகிர்:

செய்யூா் அருகே ஆலம்பரைகுப்பம் மீனவ பகுதி கடற்கரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய மா்மப் பொருள் மீட்கப்பட்டது.

செய்யூா் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இங்கு புதன்கிழமை மீனவா்கள் படகு மூலம் கடலுக்கு வந்தபோது இரும்பிலான ராக்கெட் லாஞ்சா் போன்ற மா்மபொருள் கரை ஒதுங்கி இருந்தது. இதுகுறித்து மீனவா்கள் செய்யூா் வருவாய்த் துறையினருக்கும், சூனாம்பேடு காவல் துறையினருக்கும் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அதனை மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தனா். கடலில் மிதந்து வந்த மா்மப் பொ ருளை ஏராளமானோா் ஆச்சரியத்துடன் பாா்த்து சென்றனா்.