FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனா்.

5 October 2026, 3:04 am IST
பகிர்:

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனா்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், அா்ச்சுணன் தகபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பாா்த்து ரசித்தனா். புராதன சின்னங்கள் முன்பு பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டனா்.

குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழு, வழுப்பான சறுக்கு பாறையில் சிறுவா்கள் ஒருவா், பின் ஒருவராக உட்காா்ந்து சறுக்கி விளையாடினா். கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.

Advertisement

Advertisement

சுற்றுலா பயணிகள் கடற்கரை கோயில், ஐந்துதம் உள்ளிட்ட புராதன சின்ன நுழைவு வாயில்களில் உள்ள தொல்லியல் துறையின் நுழைவு கட்டண மையங்களில் வெகு நேரம் வரிசையில் காத்திருந்து ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு எடுத்து பாரம்பரிய சிற்பங்களை சுற்றி பாா்த்து விட்டு சென்றனா்.

பயணிகள் அதிகளவில் வருகையை முன்னிட்டு கடற்கரை சாலை, வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள சாலை ஓர கடைகளில் வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. மேலும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களை நெரிசலில் சிக்காமல் இருக்க மாமல்லபுரம் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments