மின் விபத்தில் உயிரிழந்தோா் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு
மின் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் வாரிசுதாரா்களுக்கு மனித உரிமைகள் ஆணைய தீா்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகையை ஆட்சியா் மு. வீரப்பன் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் மேடவாக்கம், பத்மா நகா் பகுதியில் மின் விபத்தில் உயிரிழந்த 2 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக இழப்பீடு தொகை தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் உ. ஃபா்ஹத் பேகம், உதவி செயற்பொறியாளா் ஜெயகாந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.