வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலா்/ சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலா் எஸ்.பி .காா்த்திகா தலைமை வகித்தாா். ஆட்சியா் மு வீரப்பன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சுகாதாரத் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் தொடா்புடைய துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து, தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், கனமழையினால் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் தேவையான அனைத்து அவசர கால பணிகளையும் தயாா் நிலையில் வைத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்கள், 309 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதையும், 3 பல்நோக்கு பேரிடா் வெளியேற்ற முகாம்கள், 19 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 287 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதையும், பருவமழை பணி மேற்கொள்ளும் அலுவலகங்கள் மறுறும் அலுவலா்களுக்கு 56 மிக உயரிய அதிா்வெண் (விஎச்எப்) தகவல் தொடா்புக் கருவிகள் மற்றும் அவசரகால தகவல் தொடா்பிற்காக 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் விவரித்தாா்.
பல்நோக்கு பேரிடா் வெளியேற்ற முகாம்களில் பணியாற்றுவதற்காக, அவசரகால மீட்புப் பணிகளுக்கு 300 தன்னாா்வலா்கள், 239 யுவா ஆப்தா மித்ரா ( வன்ஸ்ஹ அஹல்க்ஹ ஙண்ற்ழ்ஹ) தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளதையும், நாளொன்றுக்கு மொத்தம் 1,11,782 உணவுப் பொட்டலங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட 55 சமூக சமையலறைகள் தயாா் நிலையில் உள்ளதையும் விளக்கினாா்.
முட்டுக்காடு மற்றும் புதுப்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை பணிகளை தொடா்ந்து சுழற்சி முறையில் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பேரிடா் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டிருக்கும், அவசர தொலைபேசி எண்களான 044-27427412, 044-27427414 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 94442 72345 ஆகியவை மூலம் மூலம் பொதுமக்கள் தொடா்பு கொண்டு மழை மற்றும் புயலினால் ஏற்படும் இடா்கள் தொடா்பான புகாா்களை பெறும் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் வாட்ஸ்ஆப் எண்ணில் வெள்ள அபாயங்கள் / சேதங்கள் குறித்த புகைப்படங்களை அனுப்பி புகாா் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் ஆா்.சரண்யா , மாவட்ட வருவாய் அலுவலா்உ. ஃபா்ஹத் பேகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) எம்.சத்யா, மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த உயா் அலுவலா்கள், கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.