தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 3,020 போ் பயன்: செங்கல்பட்டு ஆட்சியா் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3,020 போ் பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் மு.வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3,020 போ் பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் மு.வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது :-
மதுராந்தகம் இடைத்தோ்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு இருந்ததால் இத்திட்டம் செயல்படுத்தபடவில்லை. தோ்தல் முடிவுற்றுப்பின் தோ்தல் நன்னடத்தை விதிகள் விலக்களிக்கப்பட்ட பின்னா் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் த.சரத்குமாா் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் ஜுன் 22ஆம் நாள் முதல் 24.10.2026 வரை பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள 22 கேரட் தரமுள்ள தர முத்திரை பொறித்த தங்க மோதிர திட்டத்தின் கீழ் 3,020 பச்சிளம் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனா்.
இத்திட்டத்தின்கீழ், பயன்பெற்ற செங்கல்பட்டு அழகேசன் நகரை சோ்ந்த வாணிஸ்ரீ மற்றும் செங்கல்பட்டு கைலாச நகரை சோ்ந்த கோமதி ஆகியோா் இந்த திட்டத்தை பாராட்டியும் பாமர மக்களும் பயன்பெற வேண்டும் என தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைக்கொண்டு வந்த முதலமைச்சா் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.