FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒட்டகங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு: பல்துறைக் குழுவில் தமிழக தலைமை காஜியையும் இணைத்து உத்தரவு

தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேவையான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேவையான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட பல்துறைக் குழுவில் தமிழக தலைமை காஜியையும் பிரதிநிதியாக இணைத்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக பிஎஃப்சிஐ எனும் விலங்குகள் நல அமைப்பின் செயலர் ஜி.அருண் பிரசன்னாவும், இ.சேஷன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், பக்ரீத் பண்டிகையின்போது, சட்ட விரோதமாக சென்னைக்கு ஒட்டகங்கள் கடத்தி வரப்பட்டு, பொது இடங்களில் வெட்டப்படுகின்றன.
 இந்திய விலங்குகள் நல வாரியம் மாநில அரசுகளுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இறைச்சிக்காக ஒட்டகங்கள் வெட்டப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 எனவே, தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வாகனங்களில் ஒட்டகங்கள் கொண்டுவருவதையும், அவை வெட்டப்படுவதையும் தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
 அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒட்டகங்கள் வெட்டப்படும் விஷயத்தில் நீதிமன்றத்துக்குத் தேவையான பரிந்துரைகளை அளிக்க கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை, சாலைப் போக்குவரத்துத் துறை, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
 இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் பொதுச் செயலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அதில், ஒட்டகங்கள் வெட்டப்படும் விஷயத்தில் நீதிமன்றத்துக்குத் தேவையான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட குழுவில், முஸ்லிம் சமுதாயம் சார்பிலும் பிரதிநிதி இடம்பெற வேண்டும் எனக் கோரப்பட்டது.
 இந்த நிலையில், இந்த இரண்டு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
 முஸ்லிம் சமுதாயம் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
 மேலும், அதற்கு தமிழக தலைமை காஜி டாக்டர் சலாலுதீன் முகமது அயூப் பொருத்தமானவர் எனவும் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். அதை தமிழக அரசு தலைமை வழக்குரைஞரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
 எனவே, இதை ஏற்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments