சர்வதேச நீதி விசாரணை: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்; ஜி.கே.வாசன், அன்புமணி
போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்
போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்.
ஜி.கே.வாசன்: இலங்கைப் பிரதமருடைய சந்திப்பை இந்திய அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 13-ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு உள்பட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்தவும் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
அன்புமணி: போர்க் குற்றம் மீதான விசாரணையை இலங்கை நீதிமன்றமே விசாரணை மேற்கொள்ளும் என்றும், அதை ஐ.நா.கண்காணிக்கும் என்று உப்புசப்பு இல்லாத தீர்மானத்தை ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வர உள்ளது. இந்தக் குறுக்கீட்டைக்கூட இலங்கை விரும்பவில்லை. அதனால், ஐ.நா. கண்காணிப்பு என்ற வாசகத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு வந்துள்ளார். இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது. பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துக்கொள்ள இந்தியா வலியுறுத்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.