FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

400 ரன்களை சேஸ் செய்ததை நம்பமுடியவில்லை; இலங்கை அணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை சேஸ் செய்த இலங்கை அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டியுள்ளார்.

இலங்கை வீரர் ஜனித் லியாநாகே - படம் | AP
பகிர்:

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை சேஸ் செய்த இலங்கை அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதீன் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது இலங்கை அணி.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இமாலய இலக்கை சேஸ் செய்தது நம்பமுடியாத விதத்தில் இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 400 ரன்களை சேஸ் செய்வது எனக்கு முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது. ஆனால், தற்போது உள்ள நவீன கால கிரிக்கெட் அப்படி மாறிவிட்டது. இலங்கை அணியை நான் மிகவும் பாராட்டியாக வேண்டும். ஏனெனில், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் விளையாடினார்கள். நம்பிக்கையை இழந்துவிட்டால் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது கடினம்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்கும் சிறப்பாக விளையாடினார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு மிகவும் சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி நேற்று சேஸ் செய்த ஸ்கோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The former captain of the Indian team has praised the Sri Lankan team for chasing a target of over 400 runs against England in the tri-series ODI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments