FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச மனைவி கைது!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச மனைவி கைது செய்யப்பட்டது பற்றி...

ஷிராந்தி ராஜபட்ச - x
பகிர்:

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மனைவி ஷிராந்தி ராஜபட்சவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சிறிலியா சவிய ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஷிராந்தி ராஜபட்ச தொடங்கினார். இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நிதி முறைகேடுகளில் அவர் ஈடுபட்டது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஷிராந்தி ராஜபட்சவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இலங்கை திரும்பியுள்ள அவரை கிருலபோனேவில் உள்ள இல்லத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, அவரைக் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த மாதம், ‘ஏா்பஸ்’ விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகனும், அந்நாட்டு எம்.பி.யுமான நமல் ராஜபட்ச கைது செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபட்சவின் 2005 முதல் 2015 வரையிலான பதவிக்காலத்தில், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 10 ஏா்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்க நமல் ராஜபட்ச உள்ளிட்டோர் ஏர்பஸ் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

summary

Shiranthi Rajapaksa, Wife of former Sri Lankan President Mahinda Rajapaksa arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments