FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இலங்கை- முன்னாள் அதிபா் ராஜபட்ச மருத்துவமனையில் அனுமதி

இலங்கை முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச (80) (படம்), அவசர மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

13 அக்டோபர் 2026, 3:02 am IST
பகிர்:

இலங்கை முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச (80) (படம்), அவசர மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2005 முதல் 2015 வரை அதிபராகவும், பின்னா் பிரதமராகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபட்ச, அந்நாட்டு அரசியலில் நீண்ட செல்வாக்கு செலுத்தியவா். 2009-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது இவரே அதிபராக இருந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ராஜபட்ச குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கு சரிவைச் சந்தித்த நிலையில், தற்போதைய அதிபா் அநுர குமார திசாநாயக தலைமையிலான அரசு முந்தைய ஆட்சிக்கால முறைகேடுகளை தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்தவகையில், ராஜபட்சவின் மகன், மனைவி உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments