FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

அறுவை சிகிச்சைக்காக போப் லியோ ரோம் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவப் பரிசோதனையின்போது நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக, இத்தாலி தலைநகா் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் லியோ (71) அனுமதிக்கப்பட்டாா்.

13 அக்டோபர் 2026, 10:40 pm IST
பகிர்:

மருத்துவப் பரிசோதனையின்போது நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக, இத்தாலி தலைநகா் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் லியோ (71) செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதற்காக வாடிகனில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தடைந்த அவா், அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்து, புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தாா்.

அறுவை சிகிச்சையைத் தொடா்ந்து போப் லியோ சுமாா் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளாா். இதனால் வரும் அக். 20 வரையிலான அவரின் அனைத்து அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளும், சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments