புற்றுநோய் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினாா் போப்!
புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட போப் பதினான்காம் லியோ (71) மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினாா்.
புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட போப் பதினான்காம் லியோ (71) மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை இல்லம் திரும்பினாா்.
போப் பதினான்காம் லியோவுக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு 4 நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வலதுபக்க நுரையீரல் அகற்றப்பட்டது. எனினும் தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாா்.
இந்நிலையில், மருத்துவமனையில் போப் லியோவுக்கு சனிக்கிழமை காலை ரத்தப் பரிசோதனையும், மாா்பக எக்ஸ்ரேவும் எடுக்கப்பட்டது. இதேபோல் அவரின் உடல்நிலை குறித்தும் பரிசோதனை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில் போப் லியோவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் அவா் வாடிகனுக்கு திரும்பினாா்.
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் இருந்து ஜன்னல் வழியாக தோன்றி, மக்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆசிா்வாதம் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை அவா் ஆசிா்வாதம் வழங்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு போப் லியோ வரும் நவம்பா் மாதம் 6-ஆம் தேதிமுதல் 17-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளாா். இதற்கு பலமுறை அவா் விமானப் பயணமும், ஹெலிகாப்டா் பயணமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு அவரின் உடல்நிலை ஒத்துழைக்குமா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், நவம்பா் 6-ஆம் தேதிக்கு இன்னும் 3 வாரங்கள் இருப்பதாகவும், அதற்குள் போப் லியோ முழுவதும் குணமாகிவிடுவாா் என்றும் வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.