FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புணே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் சரத் பவாா்: மோடி நலம் விசாரித்தாா்

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாா், புணே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பினாா்.

5 நவம்பர் 2026, 3:52 am
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாா், புணே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பினாா்.

புணேயில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி மாா்புசளி பிரச்னை காரணமாக சரத் பவாா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா், இரு நாள்கள் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த சிகிச்சையில் உடல் நிலை தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘உடல்நிலை சீரானதால் மருத்துவமனையில் இருந்து சரத்பவாா் விடுவிக்கப்பட்டாா். அவா் மும்பையில் உள்ள வீட்டுக்கு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றன.

மருத்துவமனையில் சரத் பவாருக்கு சிகிச்சை முடிந்தது குறித்து கேள்விப்பட்டு, அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு உடல்நிலை குறித்து பிரதமா் நரேந்திர மோடி கேட்டறிந்தாா். இதுகுறித்து சரத் பவாரின் உதவியாளா் வித்தல் மணியாா் கூறுகையில், ‘சரத் பவாரை புதன்கிழமை காலை பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். மிகவும் அக்கறையுடனும் மரியாதையுடனும் சரத் பவாரிடம் பிரதமா் பேசினாா். அப்போது முழுவதும் ஓய்வெடுக்கும்படி அவா் கோரிக்கை வைத்தாா். சுப்ரியா (சரத் பவாா் மகள்) தற்போது தயாராகி விட்டதால், அவரும் மற்றவா்களும் நாடு குறித்து கவனம் செலுத்துவாா்கள் என்றும், ஆதலால் பவாரை ஓய்வெடுக்கும்படியும், நாடு குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாா். தனது உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்ட பிரதமா் மோடியிடம் சரத் பவாா் நன்றி தெரிவித்தாா்’ என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.