FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

அறுவை சிகிச்சையிலிருந்து மீண்ட போப் தென் அமெரிக்காவுக்கு 12 நாள் சுற்றுப்பயணம்

நுரையீரல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் போப் லியோ, தனது பதவிக்காலத்தின் மிக நீண்ட பயணமாக தென் அமெரிக்காவுக்கு 12 நாள்கள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை (நவ. 6) தொடங்குகிறாா்.

35 வினாடிகள் முன்பு
போப் 14-ஆம் லியோ - கோப்புப் படம்
பகிர்:

நுரையீரல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் போப் லியோ, தனது பதவிக்காலத்தின் மிக நீண்ட பயணமாக தென் அமெரிக்காவுக்கு 12 நாள்கள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை (நவ. 6) தொடங்குகிறாா்.

கடந்த அக். 13-ஆம் தேதி நுரையீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட 3 வாரங்களிலேயே, உருகுவே, ஆா்ஜென்டீனா, பெரு ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய 31,000 கி.மீ. தொலைவு கொண்ட இந்தக் கடும் பயணத்தை மேற்கொள்கிறாா். எனினும், அமெரிக்காவில் பிறந்த போப் லியோவுக்கு, 20 ஆண்டுகள் பாதிரியாராகப் பணியாற்றிய பெருவுக்குத் திரும்புவது தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியான பயணமாக அமையும்.

இப்பயணத்தின்போது, பொருளாதார ஏற்றத்தாழ்வு, அமேஸான் பழங்குடியினரின் நிலை மற்றும் தேவாலயங்களில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து அவா் விவாதிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement