FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: அரையிறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா!

ஆசிய விளையாட்டு அரையிறுதியில் இலங்கையை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியைப் பற்றி...

இந்திய அணியினர்.
பகிர்:

ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் நேற்று (செப். 28) நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஆப்கனை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக இந்தப் போட்டி காசு சுண்டப்படாமலேயே கைவிடப்பட்டது.

கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் வேளையில், வி.வி.எஸ். லக்‌ஷ்மன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜப்பானில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேபாளம் - இலங்கை அணிகள் மோதவிருந்த காலிறுதிப் போட்டி காசு சுண்டாமலேயே மழையால் கைவிடப்பட்டதால் ஐசிசி தரவரிசை அடிப்படையில் இலங்கை அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

Advertisement

Advertisement

இதனால், டி20-ல் நம்பர் 1 அணியான இந்திய அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவிருக்கிறது.

முன்னதாக, மழை காரணமாக பாகிஸ்தான் - ஹாங் காங் இடையிலான முதல் காலிறுதிப் போட்டியும் கைவிடப்பட்டது. தவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் போட்டி உள்பட நான்கு காலிறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டுள்ளன.

summary

The Asian Games men's cricket semi-final line-up is now confirmed after rain washed out all four quarter-finals. India will face Sri Lanka, while Pakistan will take on Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments