FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செம்பாக்கம் நகராட்சி முன் முற்றுகைப் போராட்டம்

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் காமராஜபுரம் அம்பேத்கர் தெரு குடியிருப்புப் பகுதியில் முஸ்லிம்கள் மதரஸா கட்டுவதை

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் காமராஜபுரம் அம்பேத்கர் தெரு குடியிருப்புப் பகுதியில் முஸ்லிம்கள் மதரஸா கட்டுவதை நகராட்சி அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினர் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பின்னர், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணியினர் செம்பாக்கம் நகராட்சித் தலைவர் ஜி.எம்.சாந்தகுமாரை சந்தித்து, குடியிருப்புப் பகுதியில் மதரசா கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி அனுமதி வழங்கி உள்ளதா என்பது குறித்த தகவல்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தங்களுக்குத் தெரிவிக்கக் கோரி மனு அளித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக செம்பாக்கம் நகராட்சி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments