போக்சோ வீரமணி மீது 8-ஆவது வழக்குப் பதிவு!
போக்சோ வீரமணி மீது 8-ஆவது வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறித்து...
போக்சோ வீரமணி மீது காவல்துறை மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதுவரையில் 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரமணியின் மகள் அர்ச்சனாவும் இன்று (அக். 25) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வழக்குரைஞர் நேரில் ஆஜரானார்.
இதனிடையே, வீரமணி மீதான 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வீரமணி மீது 8-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
8th case registered against POCSO Veeramani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.